டிரம்ப் குறித்து சன்னி லியோன் கூறியது என்ன?
பிபிசி நேர்காணலின்போது பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம், "டிரம்புக்கும் ஹாலிவுட்டுக்கும் இறுக்கமான உறவு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு தலைவராக அவரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை சன்னி லியோன், "இது மிகவும் கடினமான கேள்வியாக தோன்றுகிறது." என்றார்.
மேலும் பேசிய அவர், "கோவிட் காலத்தில், நான் கலிஃபோர்னியாவில் வசித்தேன், அங்கு டிரம்ப் எதிர்ப்பு உணர்வு மிக அதிகம்.
அனைவரும் கூடும்போதோ, நண்பர்கள் வரும்போதோ அரசியல் பற்றி எப்போதும் பேசக்கூடாது என எங்கள் வீட்டில் ஒரு விதி இருந்தது.
ஏனெனில், அரசியல் பற்றி பேசத் தொடங்கினால் உடனே நண்பர்களை இழந்து விடுவீர்கள்." என பதில் அளித்தார்.
"ஏனெனில், அனைவரும் ஒன்று இந்த பக்கம் அல்லது அந்த பக்கம் இருக்கிறார்கள். நாம் வாழ்கிற இந்த காலத்தில் மையம் என ஒன்று கிடையது.
ஒன்று அவரை வெறுக்கிறீர்கள் அல்லது நேசிக்கிறீர்கள்; மையம் என ஒன்றும் இல்லை. நான் இந்தக் கேள்வியை தவிர்த்துவிடப் போகிறேன். ஒருநாள், நாம் அனைவரும் நம் தலைவர்களை நேசிக்கும் ஒரு காலத்திற்கு திரும்புவோம் என்று நம்புகிறேன். அவரை பாராட்டக்கூடிய விஷயங்கள் எனக்கு உள்ளன. ஆனால், சில விஷயங்களில் நான், 'ஓ மை காட், தயவுசெய்து பேசுவதை நிறுத்துங்கள்' என்று நினைப்பேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "அவரின் காலத்தில் பொருளாதாரம் பெரிதும் வளருமா? ஆம். ஆனால் அந்த ஆண்டுகளின் இறுதிக்குள் கொடுக்கப்போகும் விலை என்ன?, மாற்றங்கள் என்ன? சில நிகழ்வுகள் முற்றிலும் தேவையற்றவை, ஆனால் சில விஷயங்கள் முற்றிலும் அவசியமானவை. எனவே, நான் மையமாக இருக்கும் நபர். இவர் அதிகாரத்தில் இருப்பார் என தீர்மானித்த நபரை நேசிக்க விரும்புகிறவள்." என பதில் அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



