மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு

காணொளிக் குறிப்பு, மிக்ஜாம் புயல் நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் - காணொளி
மிக்ஜாம் புயல் நிவாரணம்: ரேஷன் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு
பிரசுரிக்கப்பட்டது

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக் கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

மிக்ஜாம் புயல் கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை பார்த்திராத அளவுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்திச் சென்றது.

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)