"அனைவரும் காஷ்மீருக்கு வாருங்கள்" - 'ரன்' திரைப்பட நடிகர் வேண்டுகோள்

காணொளிக் குறிப்பு,
"அனைவரும் காஷ்மீருக்கு வாருங்கள்" - 'ரன்' திரைப்பட நடிகர் வேண்டுகோள்
பிரசுரிக்கப்பட்டது

தாக்குதலுக்குப் பிறகு பஹல்காமை அடைந்த சுற்றுலாப் பயணிகளில் திரைப்பட நடிகர் அதுல் குல்கர்னியும் ஒருவர்.

"இது சுற்றுலா செல்வதற்கான சீசன் என்றாலும் தாக்குதலுக்கு பிறகு 90 சதவீத முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று எனக்கு தெரியவந்தது" என்று அவர் கூறினார்.

"சுற்றுலா என்பது சுற்றுலாவைப் பற்றியது மட்டுமல்ல, அது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. சுற்றுலா என்பது மக்கள் ஒருவரையொருவர் இணைக்கும் ஒரு கருவியாகும். கடந்த ஓரிரு ஆண்டுகளில் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் இங்கு வருகிறார்கள்.

பயங்கரவாதிகள் இங்கு வர வேண்டாம் என்பதற்காக இவ்வாறு இதனை செய்தனர். ஆனால் நாங்கள் எப்போதும் போல காஷ்மீருக்கு சுற்றுலா வருவோம். பயணிகள் முன்பதிவை ரத்து செய்ய வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

மக்கள் அனைவரும் காஷ்மீருக்கு வாருங்கள். இது மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் வேறு எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், அதை ரத்து செய்து இங்கே வாருங்கள்", என்று நடிகர் அதுல் குல்கர்னி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.