காணொளி: வெள்ளத்தை பார்வையிட சென்ற எம்.பியை தோளில் சுமந்து சென்ற மக்கள்

காணொளிக் குறிப்பு, காணொளி: வெள்ளத்தை பார்வையிட சென்ற எம்.பியை தோளில் சுமந்து சென்ற மக்கள்
காணொளி: வெள்ளத்தை பார்வையிட சென்ற எம்.பியை தோளில் சுமந்து சென்ற மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

பிஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எம்.பி ஒருவரை அப்பகுதி மக்கள் முதுகில் சுமந்து சென்ற காட்சி வைரலாகியுள்ளது.

தூக்கிச் செல்லப்படுபவர் கடிஹார் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி தாரிக் அன்வர்.

அந்த பகுதியில் சேறு மற்றும் தண்ணீர் நிரம்பியிருந்ததால், உள்ளூர் மக்கள் அவரை முதுகில் சுமந்து சென்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள எம்பி தரிக் அன்வர், "நான் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்தேன் மேலும் அப்பகுதியில் சேற்றில் நடந்து செல்வது பாதுகாப்பானது இல்லை என்பதால் தன் மீது உள்ள அன்பினால் மக்களே என்னை தோளில் சுமந்து சென்றனர்" என கூறியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு