51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண் - குடும்பத்துடன் சேர்ந்தது எப்படி?
51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண் - குடும்பத்துடன் சேர்ந்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மெலிசா ஹைஸ்மித்துக்கு இப்போது வயது 53. 1971-ஆம் ஆண்டு அவர் 22 மாத குழந்தையாக இருந்தபோது ஃபோர்ட் வொர்த் நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து குழந்தை பராமரிப்பாளரால் கடத்தப்பட்டார்.
பல ஆண்டுகளாக குடும்பத்தினர் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடைசியாக ஓர் இணையதள நிறுவனத்துக்கு வந்த டிஎன்ஏ மாதிரிகள் பொருந்திப் போனபோதுதான் அவர் குடும்பத்துடன் சேர முடிந்தது.

பட மூலாதாரம், FACEBOOK/HIGHSMITH
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



