டெல்லியில் கனமழை: யமுனையில் கரைபுரளும் வெள்ளம் - தத்தளிக்கும் மக்கள்

காணொளிக் குறிப்பு, வரலாறு காணாத கனமழை: யமுனையில் வெள்ளம் - தத்தளிக்கும் தலைநகர்
டெல்லியில் கனமழை: யமுனையில் கரைபுரளும் வெள்ளம் - தத்தளிக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி யமுனா ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியுள்ளது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் அதிகப்படியான நீர் பெருக்கெடுத்து ஓடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

யமுனா ஆற்றின் கரையைத் தாண்டி முக்கிய சாலைகளிலும் நீர் புகுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை தங்க வைக்க 2500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக ராய்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

யமுனையில் வெள்ளம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி மயூர் விஹாரில் வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: