டைனோசர் முட்டையை வணங்கும் இந்திய கிராமம் - காணொளி

காணொளிக் குறிப்பு, இந்தியாவின் 'ஜுராசிக் பார்க்': டைனோசர் முட்டைகளை சிவலிங்கமாகக் கருதி வழிபடும் கிராமம்
டைனோசர் முட்டையை வணங்கும் இந்திய கிராமம் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில், நிலத்தில் சுற்றித் திரிந்த ராட்சத உயிரினங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தவிர, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்களின் படிமங்கள் சிதறிக் கிடக்கின்றன.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் சூழல் சுற்றுலா வாரியத்தின்(eco tourism board) முயற்சியால், நாடு முழுவதும் உள்ள பிரபல விஞ்ஞானிகள் இங்கு வந்தனர்.

மேலும் அவர்கள் முழு பகுதியையும் ஆய்வு செய்த பின்னர் தங்கள் அறிக்கையை தயாரித்துள்ளனர். பாக் மற்றும் தார் பகுதிகளுக்கு 'ஈகோ ஹெரிடேஜ்' அந்தஸ்து கிடைக்க வகைசெய்யும் பொருட்டு இந்த அறிக்கை தொகுக்கப்பட்டு யுனெஸ்கோவிற்கு அனுப்பப்படும்.

இந்திய டைனோசர்கள்

இதனால் இந்த பகுதியின் பாரம்பரியம் காக்கப்படுவதோடு கூடவே ஆராய்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று 'சூழல் சுற்றுலா' வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சமிதா ரஜோரா பிபிசியிடம் தெரிவித்தார். விரிவான தகவல் இந்த காணொளியில்...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: