'மேன்டோஸ்’ புயல் எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?

காணொளிக் குறிப்பு, 'மேன்டோஸ்’ புயல் எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?
'மேன்டோஸ்’ புயல் எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?
பிரசுரிக்கப்பட்டது

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயலுக்கு மேன்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேன்டோஸ் புயல் எப்போது கரையைக் கடக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: