ராஜஸ்தானில் 26 வயது தலித் இளைஞருக்கு நடந்த கொடூரம் - கலங்கும் தாய்

காணொளிக் குறிப்பு, ராமேஷ்வரை கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அடித்துக் கொன்றுவிட்டனர்.
ராஜஸ்தானில் 26 வயது தலித் இளைஞருக்கு நடந்த கொடூரம் - கலங்கும் தாய்
பிரசுரிக்கப்பட்டது

தரையில் கைகளை கட்டியபடி, அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் இந்தப் பெண்மணி அறுபத்தைந்து வயதான ராதா தேவி. அவருடைய மகன் ராமேஷ்வரை கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அடித்துக் கொன்றுவிட்டனர்.

வயதாகி, உடல் நலிவுற்று, முகத்தில் சுருக்கங்களுடன் காணப்படும் இவர் கடந்த பத்து நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு ராதா தேவி மிகுந்த மனஉளைச்சலுடன்  உள்ளார். தனது 26 வயது மகனைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டுமென கோருகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)