கராத்தேவில் சாதிக்கும் பாட்டி, பேத்தி ஜோடி - ஓய்வு வயதில் தொடங்கிய புது இன்னிங்ஸ்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கீதா கோதாரா தனது 11 வயது பேத்தியை கராத்தே கற்றுக்கொள்வதற்காக கராத்தே அகாடமிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் பேத்தியுடன் கூடவே தானும் ஒரு நாள் நாட்டிற்காக பதக்கம் வெல்லப்போகிறோம் என்று அப்போது அவர் நினைக்கவில்லை. ஹரியானா மாநிலம் குருகிராமில் வசிக்கும் இந்த பாட்டி-பேத்தி ஜோடி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது.
ஏப்ரல் 30ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 60 வயதான கீதா கோதாரா மற்றும் அவரது 13 வயது பேத்தி ஆஷ்கா கோதாராவும் முறையே வெள்ளி மற்றும் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
பொதுவாக பலரும் ஓய்வுபெறும் அந்த வயதில், கீதா தனது வாழ்க்கையில் ஒரு புதிய இன்னிங்ஸை தொடங்கினார். குறுகிய காலத்தில் கராத்தே கற்றுக்கொண்டு விளையாட்டில் வயதின் தடையை முறியடித்தது மட்டுமின்றி தனது சிறு வயது கனவையும் நிறைவேற்றினார்.
கீதா தனது பேத்தியுடன் அகாடமிக்கு செல்வது வழக்கம். பேத்தி விளையாடுவதைப் பார்த்து அவருக்கும் கராத்தே கற்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



