You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
18 வயது வரை எழுத, படிக்க தெரியாது - ஆனால் இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்(காணொளி)
3 வயது வரை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜேசனுக்கு அவரின் 11 வயது வரை பேச முடியாது.
தாயின் கண்காணிப்பில் வளர்ந்து வந்த ஜேசனுககு 18 வயது வரை எழுத, படிக்க தெரியாது.
பின்னர் கல்லூரி பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் ஜேசன் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்ள தொடங்குகிறார்.
22 வயதில் ஜேசனுக்கு பி.எச்டி பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட அதை நோக்கி ஓடிய ஜேசன் படித்து பட்டம் பெற்று, இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த பல்கலைக்கழகத்தில் மிக இளம் வயதில் பேராசிரியராக பணியில் சேர்ந்த முதல் கருப்பின இளைஞர் ஜேசன் ஆவார்.
"இவர் எங்கள் பல்க்லைக்கழகத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்" என்கிறார் ஜேசனின் துறைத் தலைவர்.
ஜேசன் தற்போது, அனைத்து பின்புலத்திலிருந்து வரும் நபர்களுக்கு உயர்கல்வியை எப்படி எளிதாக கொண்டு சேர்ப்பது என ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்