You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியதை பொய்யாக்கிய கதை
இங்கிலாந்தில் வசிக்கும் மேரியம் மற்றும் இன்டெயே, தற்போது ஐரோப்பாவில் வாழும் ஒரே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இவர்கள் பிறந்தபோது சில நாட்களுக்கு மேல் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறினார்கள். சமீபத்தில் தங்களது ஏழாவது பிறந்தநாளை கொண்டாடினார்கள் இந்த சகோதரிகள்.
இரட்டையர்கள் ஒட்டிப்பிறப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு, இங்கிலாந்தில் 500,000 குழந்தைப் பிறப்புகளில் ஒன்று மட்டுமே அவ்வாறு நிகழும்.
அதிலும் பாதி இரட்டையர்கள் இறந்து பிறக்கிறார்கள், மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் பிறந்த 24 மணி நேரத்திற்குள் இறந்துவிடுகிறார்கள்.
மேரியம் மற்றும் இன்டெயே, தங்களது ஏழாவது பிறந்தநாளை பல நண்பர்களுடன் கொண்டாடுவதைப் பார்த்த போது தந்தை இப்ராஹிமாவும், இரட்டையர்களை கவனித்துக்கொண்ட மருத்துவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
"இதைத் தான் நான் விரும்பினேன். மற்ற குழந்தைகளை போல அவர்களும் வாழ வேண்டும், சுதந்திரமாக வளர வேண்டும். அவர்கள் சமூகத்தில் இருந்து ஒளிந்து வாழத் தேவையில்லை. அவர்கள் நன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன். ஆனால் எத்தனை வருடங்களுக்கு என தெரியாது, தெரிந்துகொள்ளவும் நான் விரும்பவில்லை. இன்றைய பொழுதைப் பற்றி மட்டும் தான் யோசிக்கிறேன். எனவே சந்தோஷமாக இருக்கிறோம்" என்கிறார் இப்ராஹிமா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)