டி20 உலகக்கோப்பை: இந்தியா தன்னை சாம்பியன் அணியாக நிரூபித்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, காணொளி: 2024 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது எப்படி?
டி20 உலகக்கோப்பை: இந்தியா தன்னை சாம்பியன் அணியாக நிரூபித்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த நொடி, கிரிக்கெட் என்பது மிகப்பெரிய மதம் போலக் கருதப்படும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் சார்பாக விளையாடும் அணிக்கு கேப்டனாக தலைமையேற்று விளையாடும் ரோஹித் சர்மாவிடம் பெரிதாக எந்தக் கொண்டாட்ட உணர்வும் இல்லை.

மைதானத்தில் படுத்தேவிட்டார். பின் ஆனந்தக் கண்ணீரில் தேம்பிய ஹர்திக் பாண்டியாவை ஆற்றுப்படுத்தினார், அதன் பின் சில நொடிகள் தனித்துச் சென்றுவிட்டார். அது ஒரு விடுதலை உணர்வு.

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா எனப் பலருக்கும் ஒரு விடுதலை உணர்வு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)