You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனான் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
மத்திய பெய்ரூட்டில் உள்ள லெபனான் நாடாளுமன்றத்திற்கு சில மீட்டர்கள் தூரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
முதல் முறையாக மத்திய பெய்ரூட்டுக்கு அருகே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
மறுபுறம், புதனன்று ஹெஸ்பொலா உடன் தெற்கு லெபனானில் நடந்த தரைவழி மோதலில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் இஸ்ரேலிய டாங்கிகளை அழித்துள்ளதாகவும் இஸ்ரேலிய படைகளை பின்வாங்க வைக்க போதுமான பலமும் ஆயுதங்களும் இருப்பதாகவும் ஹெஸ்பொலா தெரிவித்துள்ளது.
தற்போது, மத்திய பெய்ரூட்டில் நடத்திய தாக்குதல் தவிர்த்து தெற்கு பெய்ரூட்டில் மேலும் ஐந்து வான்வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெய்ரூட்டின் பஷோரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஹெஸ்பொலாவுக்கு தொடர்புடைய மருத்துவ முகாம் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)