You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரத்பாபு மறைவு: ஊடக வெளிச்சம் படாமல் தனி வாழ்வை பாதுகாத்த திரை நட்சத்திரம்
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்சிஸ் என்பது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுக்கு எதிர்வினையாற்றும் ஒரு அபாயகர மருத்துவ நிலை ஆகும்.
விரிவான தகவல் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்