நூறு அடி ஆழத்தில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான மெட்ரோ வழித்தடம் - எங்கு இருக்கிறது? - காணொளி

காணொளிக் குறிப்பு, நூறு அடி ஆழத்தில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான மெட்ரோ வழித்தடம் - எங்கு இருக்கிறது?
நூறு அடி ஆழத்தில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான மெட்ரோ வழித்தடம் - எங்கு இருக்கிறது? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கொல்கத்தா — ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டடங்கள், துருப்பிடித்த டிராம்கள் போக்குவரத்து நெரிசல்கள் நிறைந்த நகரம்.

இங்குதான் 1984-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மெட்ரோ சேவை துவங்கியது.

தற்போது இந்த நகரத்திற்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.

ஆம், இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான மெட்ரோ வழித்தடம் இங்கு துவங்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ வழித்தடம். இந்த நீள ஒளி, ஹூக்ளி ஆற்றில் சுமார் 100 அடி ஆழத்தில் நாம் இருக்கிறோம் என்பதை குறிக்கிறது.

இந்த வழித்தடம் சுமார் 500மீட்டர் நீளம் கொண்டது. இது கொல்கத்தாவை மற்றொரு கரையில் உள்ள ஹாவுராவுடன் இணைக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என கூறப்படுகிறது. ஹாவுராவில் இருந்து சாலை மார்க்கமாக எஸ்பிளனேட் செல்ல 30 நிமிடங்கள் எடுத்த நிலையில், இனி மெட்ரோ மூலம் 5 நிமிடத்தில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் இந்த மெட்ரோ உருவாக்கத்தின் போது சில சவால்களும் இருந்தன.

நூறு அடி ஆழத்தில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான மெட்ரோ வழித்தடம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)