You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசம்: குழந்தைகளை குறிவைத்துக் குதறும் ஓநாய்கள் - அஞ்சி நடுங்கும் 30 கிராமங்கள்
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஓநாய்க் கூட்டம் இரவில் வீடு புகுந்து குழந்தைகளைக் குறி வைப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியா-நேபாள எல்லையை ஒட்டியுள்ள டெராய் பகுதியில் ஓநாய்கள் தொல்லை அதிகமாகியுள்ளது.
இந்த ஓநாய்களின் தாக்குதலில் பெரியவர்களால்கூட தப்பிக்க முடிவதில்லை. அங்கு கடந்த ஜூலை முதல் நடந்த ஓநாய்த் தாக்குதல்களில் 6 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும், 26 பேர் காயமடைந்துள்ளனர்.
வனத்துறையினர் இந்த ஓநாய் கூட்டத்தைப் பிடிக்கப் போராடி வரும் நிலையில், இதுவரை மூன்று ஓநாய்கள் மட்டுமே பிடிபட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில், மொத்தம் 9 வனத்துறை குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஓநாய்கள் நடமாடும் பகுதிகளில் நான்கு கூண்டுகள், 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோக, இந்தத் தேடுதல் பணியில் உடல் வெப்பத்தை வைத்துக் கண்காணிக்கும் தெர்மல் ட்ரோன்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதோடு, ஓநாய்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)