இந்த சிகையலங்காரக் கலைஞர் கொஞ்சம் ‘ஸ்பெஷல்’ - எப்படி தெரியுமா? – காணொளி
இந்த சிகையலங்காரக் கலைஞர் கொஞ்சம் ‘ஸ்பெஷல்’ - எப்படி தெரியுமா? – காணொளி
பிரசுரிக்கப்பட்டது
இவர் பெயர் ஹனி. பஞ்சாம் மாநிலம் ஜலந்தரில் வசித்துவருகிறார். இவர் சிகையலங்கார கலைஞராக உள்ளார். இதில் என்ன பெரிய விஷயம்? என்கிறீர்களா? ஹனி காது கேளாத, வாய் பேச முடியாதவர்.
பிறப்பிலிருந்தே காது கேளாத, வாய் பேச முடியாத ஹனி, இப்போது உள்ளூரில் இயங்கிவரும் அழகுக்கலை அகாடமி ஒன்றில், முன்னணி சிகையலங்கார கலைஞராக உள்ளார். இவருடைய வாடிக்கையாளர்களில் சிலர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். அவர்கள் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் ஹனியிடம் தான் சிகையலங்காரம் செய்துகொள்வர்.
செய்தியாளர் - பிரதீப் சர்மா
படத்தொகுப்பு - சதாஃப் கான்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



