காணொளி- ‘வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்’ - டிரம்ப் கூறியது என்ன?
காணொளி- ‘வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்’ - டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை செய்யக்கூடிய நேரம் வரும் வரை நாங்கள் நாட்டை நிர்வகிக்க போகிறோம். வேறு யாராவது உள்ளே நுழைவதை நாங்கள் விரும்பவில்லை." என்று கூறினார்.
"அப்படி நடந்தால் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் எதிர்கொண்ட அதே சூழல் மீண்டும் ஏற்படும். எனவே பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் வரை நாங்கள் நாட்டை நிர்வகிக்க போகிறோம். அதிகார மாற்றம் நியாயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அதுதான் எங்கள் நோக்கமே." என்றும் டிரம்ப் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



