ஆயிரக்கணக்கான மக்கள் தகிக்கும் எரிமலைக்கு அருகே ஏன் செல்கிறார்கள்? - வீடியோ
ஆயிரக்கணக்கான மக்கள் தகிக்கும் எரிமலைக்கு அருகே ஏன் செல்கிறார்கள்? - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
பொதுவாக எரிமலை வெடிக்கும் போது மக்கள் பதட்டமடைவார்கள். அந்தப் பகுதியில் இருந்து விலகிச்செல்லவே நினைப்பார்கள்.
ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் எரியும் எரிமலைக்கு அருகே விரும்பிச் செல்லும் காட்சிதான் இது.
இந்த இடம் இந்தோனீசியாவின் ஜாவாவில் உள்ள ப்ரோமோ எரிமலை.
இந்த எரிமலையின் முகப்பிற்கு செல்லும் இந்து பக்தர்கள் பழங்கள், காய்கறிகள், கால்நடைகளை படையல் போடுகிறார்கள். தெங்கர் பழங்குடியின மக்கள் நூற்றாண்டு பழமையான 'யத்ன்யா கசாடா' என்ற தங்கள் மத விழாவைக் கொண்டாட இந்த எரிமலையின் முகப்புக்குச் செல்கிறார்கள்.
இந்தப் பண்டிகை தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



