இரானை தாக்கிய அமெரிக்கா: முஸ்லிம் நாடுகள் என்ன சொல்கின்றன?
இரானை தாக்கிய அமெரிக்கா: முஸ்லிம் நாடுகள் என்ன சொல்கின்றன?
பிரசுரிக்கப்பட்டது
சமீப நாட்களில் இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான மோதல் வலுத்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக இரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தெரிவித்தார். இரான் சமாதானத்துக்கு முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்காவின் தாக்குதலை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.
அமெரிக்கா தாக்குதலை அடுத்து இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது இன்று மட்டும் 16 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து இஸ்லாமிய நாடுகள் எதிர்வினையாற்றியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



