திருமணமான 7 நாளில் பஹல்காமில் பலியான கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் யார்?
திருமணமான 7 நாளில் பஹல்காமில் பலியான கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் யார்?
பிரசுரிக்கப்பட்டது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டுள்ளார்.
வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.
அவர் அங்குள்ள பஹல்காமிற்கு சென்ற நாளன்று, அங்கு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அந்த தாக்குதலில் 26 நபர்கள் உயிரிழந்தனர். அதில் வினயும் உயிரிழந்தார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களைப் படிக்க:
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



