பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்
பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தின் மான் பாலா மாவட்டத்தில் வசிக்கும் 29 வயதான நஸ்ருல்லா, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணுடன் சமூக ஊடக வாயிலாகத் தொடர்புகொண்டு நட்பாகப் பழகியிருக்கிறார். அது காலப்போக்கில் காதலாக மலர்ந்தது.

தொடர்ந்து இந்தக் காதல் உறவு அவர்களுக்குள் மிகவும் ஆழமான உறவாக மாறியது. இதற்கிடையே, அண்மையில் நஸ்ருல்லா உடனான தனது உறவை முறையான, சட்டப்பூர்வமான உறவாக மாற்ற

அஞ்சு பாகிஸ்தானுக்குச் சென்றார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள மான் பாலாவை அடைந்த அஞ்சு பிபிசியுடன் ஒரு சிறப்பு உரையாடலில் பங்கேற்றார்.

அப்போது அவர், "திருமணத்திற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதில் தமக்கு எந்த அழுத்தமும் இல்லை," என்று கூறினார். அதேவேளையில் அவருக்கும் திருமணத்திற்காக மதம் மாறுவதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை என்பது அவரது உரையாடலில் தெரிய வந்தது.

பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: