பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை 2022 விருதை வென்றார் மீராபாய் சானு

பிரசுரிக்கப்பட்டது

மீராபாய் சானு 2022ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளார். மக்களின் வாக்குகள் மூலம் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான விருதையும் வென்றிருந்தார் மீராபாய் சானு. இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை இந்த விருதினை வென்ற தடகள வீராங்கனை என்ற சிறப்பை பெறுகிறார் அவர்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த சானு விறகுக் கட்டை தூக்கி பளு தூக்குதலை கற்றுக் கொண்டவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: