You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு: அதிவேகத்தில் பறந்த பைக், அலறிய ஜி.பி. முத்து
டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை, பின் இருக்கையில் அமரவைத்து, அதிக வேகமாக பைக் ஓட்டிச்சென்ற, யூட்யூபர் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் யூட்யூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். கோவையைச் சேர்ந்த இந்த இளைஞர், பைக்கில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரிலுள்ள தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வீடியோக்கள், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்டவர்கள் இடையே மிகவும் பிரபலம். அதிகமான ரசிகர்கள் உள்ள அதே சமயம், அவர் வேகமாக பைக் ஓட்டிச் செல்வது குறித்த விமர்சனங்களும் உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்