http://www.worldservice.com/tamil

09 மே, 2008 - பிரசுர நேரம் 13:23 ஜிஎம்டி

தீண்டாமைச் சுவர்: எதிர்ப்பும் இடிப்பும்

தமிழகத்தில் மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தின் தீண்டாமைச் சுவர் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து தமிழோசையில் இடம்பெற்ற செய்திகள் மற்றும் செவ்விகள்.

06/05/2008

தமிழகத்தின் உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்களை கிராமம் வழியாக செல்லவிடாமல் சாதி ஹிந்துக்களால் கட்டப்பட்ட சுவரின் ஒரு பகுதியை உடைத்து அவர்களுக்கு கிராமத்தை அணுக வழி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து தமிழக செய்தியாளர் டி.என்.கோபாலன் வழங்கிய செய்திக் குறிப்பு.

செய்தியாளர் கோபாலன் செய்திக் குறிப்பு

தமிழக அரசின் இந்த உத்தரவு குறித்து, இந்த பிரச்சினையில், சுவற்றை அகற்ற போராட்டங்களை நடத்திய இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் வழங்கிய செவ்வி.

மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் பேட்டி

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த சுவரை கட்டிய சாதி இந்துக்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, அருகே உள்ள ஒரு மலைப்பகுதிக்கு சென்று விட்டதாக தகவல்கள் கிடைத்தன. இந்த கிராமத்தில் இந்த சர்ச்சைக்குரிய சுவரைக் கட்டிய பிள்ளைமார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் எஸ் பி முருகேசன் தமிழக அரசின் உத்தரவு குறித்து வெளியிட்ட கருத்துகள்.

பிள்ளைமார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் முருகேசன் செவ்வி

03/05/2008

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாழ்விடங்களையும் மற்ற சாதியினர் வாழும் இடங்களையும் பிரித்துக்கொள்வதற்காக இருபது ஆண்டுகள் முன்பு எழுப்பப்பட்ட தடுப்புச் சுவரை இடிக்கச் சொல்லி கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில் பதற்றத்தை தணித்து பிரச்சினைக்கு தீர்வுகாணஅரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் ஜவஹர் தமிழோசையிடம் வெளிட்ட கருத்துகள்.

மாவட்ட ஆட்சியர் ஜவஹர் செவ்வி