You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்திய விமானப்படை தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகள்
பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டத்தின் பப்ராலி கிராமத்தை சேர்ந்த விவசாயி அமர்ஜித் சிங்கின் வீடு உற்சாகமாக காணப்படுகிறது. அவருடைய மகள் மேஹக்ப்ரீத் கவுர் விமானப்படை பொது நுழைவுத் தேர்வில் தேசியளவில் முதலிடம் பெற்றதையடுத்து அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
AFCAT எனும் இந்த விமானப்படை பொது நுழைவுத்தேர்வு, அதிகாரி நிலையிலான பணிகளுக்குத் தகுதி வாய்ந்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்திய விமானப்படை நடத்தும் ஒரு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.
"முதலில் நான் பட்டியலை பார்த்த போது என்னுடைய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தேடி பார்த்தபோது என் பெயர் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. சற்று நேரத்துக்கு என்னால் அதை சிறிதும் நம்ப முடியவில்லை. விவசாயி மகளாக நான் என் தந்தையிடமிருந்து பல விஷயங்களை கற்றிருக்கிறேன். ஆண்டு முழுவதும் ஓய்வே இல்லாமல் வயல்வெளியில் அவர் கடினமாக உழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய அர்ப்பணிப்பு எனக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியது." என்றார் மேஹக்ப்ரீத் கவுர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு